உலக செய்திகள்

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; 2 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் விரைவுசாலை அருகே 2 பேரை மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் அவர்களது உடல்களை மீட்டனர். முன்பகையால் இது நடந்திருக்க கூடும் என போலீசார் செய்தியாளர்களிடம் கூறினர். அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீப காலங்களாக அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்நாட்டின் தென்மேற்கே நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு பலூசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானின் சோதனை சாவடியில் நடந்த தாக்குதல்களில் 5 பாகிஸ்தானிய வீரர்கள் மற்றும் 13 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு