உலக செய்திகள்

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: ஒரு பெண் பலி; 9 பேர் காயம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

சிகாகோ,

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. அந்நாட்டின் தென்கிழக்கில் புளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பல்பொருள் விற்பனை அங்காடிக்குள் கடந்த 2 நாட்களுக்கு முன் புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளார்.

இதன்பின்னர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு தெற்கே இன்று காலை சாலையோரம் நின்றிருந்த மக்கள் கூட்டம் மீது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 29 வயது பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதவிர 9 பேர் காயமடைந்தனர். அந்த பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.

காயமடைந்த மற்ற 9 பேரும் உள்ளூரில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது