உலக செய்திகள்

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 5 பேருக்கு காயம்

அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

நியூ ஆர்லியன்ஸ்,

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் தென்கிழக்கில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அமைந்து உள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

அவர்களில் ஒருவருக்கு சம்பவ பகுதியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 பேர் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் காயம் அடையவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்