உலக செய்திகள்

அமெரிக்காவில் கணினி அறிவியல் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொலை

அமெரிக்காவில் கணினி அறிவியல் படித்து வந்த இந்திய மாணவர் சுட்டு கொல்லப்பட்டார்.

பெங்களூரு,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னார்டினோ நகரில் கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை கணினி அறிவியல் படித்து வந்தவர் அபிஷேக் சுதேஷ் பட் (வயது 25). இவர் உணவு விடுதி ஒன்றிலும் பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், உணவு விடுதியில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் பட் கிடந்துள்ளார். அடுத்த ஷிப்டுக்கு பணிக்கு வந்த நபர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார். இதுபற்றி அபிஷேக்கின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

இச்சம்பவம் காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் நடந்திருக்கும் என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை நடத்த காலதாமதம் ஏற்படும் என்பதனால் இறுதி சடங்குகளை கலிபோர்னியாவில் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்