உலக செய்திகள்

ஏவுகணை அணு குண்டுகளை சுமந்து செல்லும் - வட கொரியா

வட கொரியாவினால் சோதிக்கப்பட்ட ஏவுகணை அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோல்

நேற்று தங்களால் சோதிக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கனத்த, பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வல்லமையுடையது என்று வட கொரிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஏவுகணை அமெரிக்க மாநிலமான அலாஸ்காவை தாக்கும் ஆற்றல் பெற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இச்சோதனையை ஒட்டி வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-அன் அமெரிக்காவுடனான மோதல் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக கூறியுள்ளார். அத்துடன் இது அமெரிக்கர்களுக்கு சுதந்திர நாள் பரிசு என்றும் அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது. அமெரிக்க சுதந்திர நாளான ஜூலை 4 அன்று நிகழ்ந்த இந்தச் சோதனை அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த ஏவுகணை மீண்டும் புவி எல்லைக்குள் நுழைந்து திரும்பும் ஆற்றலுள்ளது என்றும் வட கொரியா கூறுகிறது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கும் திறனையும் உடையது என்றும் அந்நாடு கூறுகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...