உலக செய்திகள்

பாகிஸ்தானில் போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சுட்டு கொலை; மர்ம நபர்கள் வெறிச்செயல்

பாகிஸ்தானில் போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் 2 பேரை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.

தினத்தந்தி

பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கான் மாவட்டத்தில் தராபன் காலன் பைபாஸ் சாலையில் வாகனம் ஒன்றில் கலால் மற்றும் போதை பொருள் ஒழிப்பு துறை அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிகளுடன் திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர் வாகனத்தில் இருந்த அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோனர்.

இந்த தாக்குதலில் கலால் மற்றும் போதை பொருள் ஒழிப்பு துறையை சேர்ந்த 2 அதிகாரிகள் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் கான் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த சம்பவம் பற்றி அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு