உலக செய்திகள்

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் வரும் 23 ஆம் தேதி ஏவப்படும் என தகவல்

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது

வாஷிங்டன்,

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 2025- ஆம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பிரத்யேக விண்கலன் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதை பரிசோதிக்கும் முயற்சிகள் ஆகஸ்ட் மாதம் இறுதியில் துவங்குவதாக திட்டமிடப்பட்டது.

பொம்மைகளுடன் ஓரியன் விண்கலத்தை எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் கடந்த மாதம் 29 ஆம் தேதி அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் விணகலம் புறப்பட தயாராக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 3 ஆம் தேதி மீண்டும் ஏவ திட்டமிடப்பட்டது.

ஆனால், எரிபொருள் கசிவு காரணமாக 3- வது முறையாக இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த நிலையில், ஆர்டெமிஸ் 1 என்ற திட்டத்தை மீண்டும் வரும் 23 அல்லது 27 ஆம் தேதி செயல்படுத்த நாசா ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...