இஸ்லாமாபாத்,
அதனை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விரிவாக விசாரிக்கும்படி தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி இந்த ஊழல் வழக்குகள் கடந்த 19-ந் தேதி தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தன. ஆனால் அன்றைய விசாரணையின் போது நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, விசாரணையை 26-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று நீதிபதி முகமது பஷீர் முன்பு ஊழல் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணிக்கு நவாஸ் ஷெரீப், தனது வக்கீல் ஹவாஜா ஹரீசுடன் கோர்ட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
அப்போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர்கள், மந்திரிகள், வக்கீல்கள் உள்பட நவாஸ் ஷெரீப்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கோர்ட்டு வளாகத்தில் குவிந்திருந்தனர்.
நீதிபதியின் முன்பு ஆஜரான நவாஸ் ஷெரீப், தனது மனைவி உடல் நலம் குன்றி இருப்பதால் அவருடன் தான் இருக்கவேண்டும் எனவும், அதனால் தான் உடனடியாக செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நீதிபதி அதனை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். கோர்ட்டில் ஆஜராகாத நவாஸ் ஷெரீப் மகன்கள், மகள் மற்றும் மருமகன் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.