உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் சிறுநீரக செயலிழப்பால் பாதிப்பு

முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. #NawazSharif

தினத்தந்தி

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியாமுக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சிறையில் உள்ள நவாஸ் செரீப் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சிறைச்சாலை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் செரீப் யூரியா மற்றும் நைட்ரஜன் அளவு இரத்தம் அதிகமாகி ஆபத்தில் இருப்பதாக கூறினார்.

மருத்துவர்கள் இதய விகிதம் வித்தியாசமாக இருக்கிறது மற்றும் நீரிழிவு பிரச்சனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர். தற்காலிகமாக அரசாங்கம் அவரை வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்,

இதை தொடர்ந்து செரீப் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு