இஸ்லாமாபாத்,
ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 73) மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றநிலையில் 4 ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே தஞ்சம் அடைந்தார். இந்தநிலையில் பாகிஸ்தானில் வரும் ஜனவரியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப உள்ளார்.
வரும் 18-ந்தேதி அன்று லண்டனில் இருந்து துபாய்க்கு புறப்படும் அவர் தனிவிமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வர உள்ளார். இடைப்பட்ட நாட்களில் துபாயில் தங்கி இருந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து சட்ட ஆலோசனைகள், அரசியல் வியூகங்கள் ஆகியவற்றை குறித்து கலந்தலோசிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. தனிவிமானம் மூலம் துபாயில் இருந்து 21-ந்தேதி பாகிஸ்தானுக்கு வரும் அவரை வரவேற்க ஆதரவாளர்கள் ஆவலாக உள்ளனர்.