உலக செய்திகள்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மேல்முறையீடு?

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மேல்முறையீடு செய்கிறார். #NawazSharif

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனில் அவென்பீல்டு சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியமும், மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டனர்.

ராவல்பிண்டி அடியலா சிறையில் கேப்டன் சப்தார் ஏற்கனவே அடைக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மரியமும் 13ந் தேதி இரவு லண்டனில் இருந்து திரும்பிய நிலையில், அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் பி வகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதை எதிர்த்து, இஸ்லமாபாத் ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மர்யம் ஷெரீப், ஆகியோர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று, நவாஸ் ஷெரீப்பை அவரது வழக்கறிஞர்கள் சந்தித்து ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.