உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு; அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் பலியாகி உள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில் 28 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர். 48 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 648 பேருக்கும், இதனை தொடர்ந்து நியூஜெர்சி நகரில் 71 ஆயிரத்து 30 பேருக்கும் அதிக அளவாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று இந்த இரு நகரங்களிலும் கொரோனா வைரசுக்கான பலி எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன. நியூயார்க்கில் 11 ஆயிரத்து 586 பேரும், நியூஜெர்சியில் 3 ஆயிரத்து 156 பேரும் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 2,569 பேர் பலியாகி உள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றது. இது வேறெந்தவொரு நாட்டையும் விட மிக அதிக அளவிலான பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு