காத்மாண்டு,
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய நாடான நேபாளத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் காணப்படுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 24 ஆம் தேதி நேபாளத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு கால கட்டத்தின் போது, அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படும் எனவும், உள்நாட்டு,வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் நேபாள அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் 1,20,600 பேர் உயிரிழந்துள்ளனர்.