காத்மாண்டு,
நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மன்மோகன் கார்டியோ வஸ்குலர் மையத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் கேபி சர்மா ஒலி அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் இருமல் பாதிப்பால் கடந்த சனிக்கிழமை முதல் அவதிப்பட்டு வந்த கேபி சர்மா ஒலிக்கு, பாதிப்பு தீவிரமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில்தான் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட கேபி சர்மா ஒலி, மார்பு தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஆகியவற்றால் கடும் அவதிப்பட்டு வருகிறார். மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட கேபி சர்மா ஒலியை, குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் கேபி சர்மா ஒலி இருந்தார்