உலக செய்திகள்

நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலிக்கு நெஞ்சு வலி: சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்

நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

காத்மாண்டு,

நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலிக்கு நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வீடு திரும்பினார்.

சமீபகாலமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வரும் கேபி சர்மா ஒலிக்கு, அவரது கட்சிக்குள்ளே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கேபி சர்மா பதவி விலக வேண்டும் என்று அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT