உலக செய்திகள்

நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல்

நேபாளத்தில் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

காத்மாண்டு,

நேபாள நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் 7 மகாணங்களுக்கும் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டதால், தேர்தலை புதன்கிழமை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

நேபாளத்துக்கான புதிய அரசமைப்புச் சட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. எனவே, திட்டமிட்டபடி புதன்கிழமை தேர்தல் நடைபெறும். என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 275 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றக் கீழவைக்கான தேர்தல், கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றன.

இந்த நிலையில், 59 உறுப்பினர்களைக் கொண்ட மேலவைக்கான தேர்தல்தான் தற்போது நடைபெறுகிறது. இந்த 59 உறுப்பினர்களில் 56 பேர், வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஞ்சிய 3 உறுப்பினர்களை அதிபரே பரிந்துரைப்பார். மேலவைக்கான 56 உறுப்பினர்களையும், 1,506 நகர மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் உள்ளிட்ட 2,056 பேர் வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுப்பர். அங்குள்ள 7 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்