உலக செய்திகள்

மனித கடத்தல் குற்றச்சாட்டு; ஆஸ்திரேலியாவுக்கான நேபாள தூதர் பதவி விலகல்

ஆஸ்திரேலியாவுக்கான நேபாள தூதர் மனித கடத்தல் குற்றச்சாட்டினை அடுத்து பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தினத்தந்தி

கேன்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கான நேபாள தூதராக இருந்தவர் லக்கி ஷெர்பா. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் இவரது ஓட்டுநரான வாங்சூ ஷெர்பா என்பவர் நேபாள நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அளித்த பேட்டி ஒன்றில், மனித கடத்தலில் லக்கி ஈடுபட்டுள்ளார் என குற்றச்சாட்டு கூறினார்.

இதனை தொடர்ந்து இதுபற்றி விளக்கம் அளிக்க நாட்டிற்கு திரும்பும்படி லக்கியை நேபாள அரசாங்கம் கேட்டு கொண்டது.

இந்த நிலையில், லக்கி ஷெர்பா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இதற்கான கடிதம் நேபாள வெளிவிவகாரத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கூறிய லக்கி, எனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. நல்லெண்ண அடிப்படையில் நான் பதவி விலகியுள்ளேன். என்னை பதவி விலகும்படி யாரும் எனக்கு நெருக்கடி அளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது