ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள, 120 தொகுதிகளில், நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி, 30 இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு தேவையான, 61 இடங்களை எந்த கட்சியும் பெறாததால், புதிய அரசு அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நெதன்யாகு, 19 இடங்களை கைப்பற்றிய, யெஷ் அடிட் கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாச் மாதம் நடைபெற்ற தோதலில் பெரும்பான்மையாக 30 இடங்களை பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி கைப்பற்றியது. அதையடுத்து, அடுத்த அரசை அமைப்பதற்கான வாய்ப்பை அவருக்கு அதிபா ரூவன் ரிவ்லின் வழங்கினா. ஆட்சியமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 61 இடங்கள் தேவை என்ற நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று நெதன்யாகுவுக்கு அதிபா கெடு விதித்திருந்தா.
எனினும், கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நெதன்யாகுவால் முடியவில்லை. இதன் மூலம், மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அவா இழந்தா. இதையடுத்து, அவருக்குப் பதிலாக புதிய பிரதமரின் தலைமையில் ஆட்சிமைப்பதற்கான வாய்ப்பு எதிக்கட்சியினருக்குக் கிடைத்துள்ளது.
இதுதொடாபாக, யேஷ் அட்டிட் கட்சித் தலைவா யாயி லாபிட், யாமினா கட்சித் தலைவா நஃப்டாலி பெனெட் ஆகிய இருவரையும் சந்தித்து அதிபா ரிவ்லின் பேச்சுவாத்தை நடத்தினா. அவாகள் இருவரும் புதிய அரசை அமைக்க அதிபரிடம் விருப்பம் தெரிவித்தனா என்று அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.