இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியில் இருந்த நீதிபதி குல்சார் அகமதுவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் 28-வது தலைமை நீதிபதியாக நீதிபதி உமர் அதா பண்டியல் இன்று பொறுப்பேற்றுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் நீதிபதி உமர் அதா பண்டியலுக்கு பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் விழாவில் ராணுவ உயர் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.