உலக செய்திகள்

கொரோனா பரிசோதனை செய்ய புதிய முறை - சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா பரிசோதனை செய்ய புதிய முறையை சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தினத்தந்தி

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கொரோனா பரிசோதனைக்கு கையடக்கமான பிரீத்லைசர் சோதனை முறையை கண்டுபிடித்துள்ளனர்.இந்த சோதனையை கொரோனா ஆக்கிரமிக்காமல், மிகவும் துல்லியமாக கண்டறிய முடியும். கொரோனா அறிகுறியின்றி பாதிப்புக்குள்ளானால்கூட 5 நிமிடங்களில் பாதிப்பை கண்டறிய முடியும் என்று சொல்கிறார்கள்.

இதுபற்றி ஏசிஎஸ்நானோ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முக்கிய அம்சம், இது மாநாடுகள், திருமணங்கள் போன்றவற்றில் கலந்துகொள்கிற மக்களை விரைவாக சோதனை செய்ய வசதியாக இருக்கும் என்பதாகும். இந்த சோதனை முறையை உருவாக்கி உள்ள சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முறை மிகவும் மெதுவாக உள்ளது. மாதிரிகளை சேகரிக்க சங்கடமான ஸ்வாப் தேவைப்படுகிறது. ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டும். எனவேதான் எல்லா விதத்திலும் எளிய இந்த சோதனை முறையை உருவாக்கி உள்ளோம் என தெரிவித்தனர்.

இந்த புதிய சோதனை முறையை பயன்படுத்தி சிங்கப்பூர் ஆஸ்பத்திரிகளிலும், விமான நிலையங்களிலும் 501 பேருக்கு பரிசோதனை நடத்தி உள்ளனர். இந்த பரிசோதனை முறை கொரோனா பரவலை குறைப்பதில் முக்கிய கருவியாக செயல்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்