உலக செய்திகள்

பூமியில் முதல் விலங்குகள் தோன்றியது எப்படி ? ரகசியத்தை உடைத்தது புதிய ஆய்வு

பூமியில் தோன்றிய முதல் விலங்கு தோன்றியது எப்படி என்ற மர்மத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்தனர்.
650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின் பரிணாமம் தெடங்கியது என்பதைக் கண்டறிந்து உள்ளனர்.

ஆஸ்திரேலிய தேசியபல்கலைக்கழக இணைப்பேராசிரியர் ஜோசன் புரோக் இது குறித்து கூறியதாவது:-

நாங்கள் அந்த பாறைகளை தூள் தூளாக்கினோம் அதில் இருந்து பண்டைய உயிரினங்களின் மூலக்கூறுகளை பிரித்தெடுத்தோம். இந்த மூலக்கூறுகள் உண்மையில் இது 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மாறியதாக நமக்குத் தெரிவிக்கிறது இது சுற்றுச்சூழல் புரட்சியாக உள்ளது. இந்த மாற்றம் எழுச்சி பூமியின் வரலாற்றில் மிகவும் ஆழ்ந்த சுற்றுச்சூழல் புரட்சிகளில் ஒன்று.

இது நடப்பதற்கு முன்பு பூமியில் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வியத்தகு நிகழ்வு நடந்துள்ளது. இது ஒரு பனிப்பொழிவு நிகழ்ந்து பூமியை 50 மில்லியன் ஆண்டுகளாக முடக்கியது. பனி ஒரு தீவிர உலகளாவிய வெப்ப மூட்டும் பேது உருகி ஆறுகளாக ஓடி கடலில் ஊட்டசத்துக்களை தோற்றுவித்தன. கடலில் மிக அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உருவாகின. இது ஆதிக்கம் செலுத்தும் கடல்களில் இருந்து மிகவும் சிக்கலான வாழ்க்கை வாழ்ந்த உலகிற்கு பாக்டீரியா மூலம் மாற்றபட்டது.

உணவு வலையின் அடிப்பகுதியில் உள்ள இந்த பெரிய மற்றும் சத்துள்ள உயிரினங்கள் சிக்கலான சுற்றுச்சூழல் பரிணாம வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கியுள்ளன, அதிகரித்து வரும் பெரிய மற்றும் சிக்கலான விலங்குகள், மனிதர்கள் உள்பட, பூமியிலேயே உருவாக முடியும் என கூறினார்.


இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்