உலக செய்திகள்

உக்ரைன் எல்லையில் அதிநவீன போர் கருவிகளையும் படைகளையும் குவித்த ரஷ்யா...!

உக்ரைன் எல்லையில் அதிநவீன போர் கருவிகளையும், படைகளையும் ரஷ்யா குவித்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

மாஸ்கோ,

உக்ரைன் நாட்டு எல்லைகளில், ரஷ்யா தனது படைகளையும், அதிநவீன போர் கருவிகளையும் நிலைநிறுத்தியுள்ள செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் நீண்ட காலமாக ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் இணைவதை விரும்பாத உக்ரைன் மேற்கு நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணக்கம் காட்டி வருகிறது.

நேட்டோ ராணுவ கூட்டமைப்பிலும் உக்ரைனை சேர்க்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதனை சற்றும் விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில், தனது படைகளை அந்நாட்டு எல்லைகளில் நிலை நிறுத்தி வருகிறது.

லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள், பீரங்கிகள், ஏவுகணை அமைப்பு உள்ளிட்டவற்றை அமைத்துள்ளது. அத்தோடு, ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸை ஒட்டிய உக்ரைன் எல்லையிலும் ரஷ்யாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது