கோப்புப்படம் 
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி: அடுத்தவாரம் மந்திரி சபை ஒப்புதல் வழங்கும் - பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை

நியூசிலாந்தில் சிறுவர்களுக்கான பைசர் கொரோனா தடுப்பூசிக்கு, அடுத்தவாரம் மந்திரி சபை ஒப்புதல் வழங்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கிரிஸ்ட்சர்ச்,

உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்த நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த வாரம் மந்திரி சபை இதற்கு தனது ஒப்புதலை வழங்கும் என பிரதமர் ஜெசிந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் மக்கள்தொகையான 5 மில்லியனில் இதுவரை சுமார் 1 மில்லியன் பேருக்கு பைசர் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் பைசர்-பயோன்டேக் (Pfizer/BioNTech) தவிர வேறெந்த தடுப்புமருந்திற்கும் நாட்டின் மருத்துவ அதிகாரிகள் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்