உலக செய்திகள்

நியூசிலாந்தில் 6 மாதத்துக்கு பிறகு முதல் கொரோனா உயிரிழப்பு

நியூசிலாந்தில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு புதிய கொரோனா பாதிப்பு எதுவும் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 2-வது வாரத்தில் ஆக்லாந்து நகரில் எந்தவித வெளிநாட்டு தொடர்பும் இல்லாத ஒரு நபருக்கு டெல்டா வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தொடங்கி தற்போது வரை 782 பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் வைரஸ் பரவலின் மையமாக மாறியுள்ள ஆக்லாந்து நகரில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.

இந்தநிலையில் நியூசிலாந்தில் 6 மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா வைரசால் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்லாந்து நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 90 வயதான மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூசிலாந்தில் கொரோனாவால் நிகழ்ந்த 27 உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை