உலக செய்திகள்

நியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் எற்பட்ட எரிமலை வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

வெலிங்டன்,

நியூசிலாந்து நாட்டின் வகாடனே நகரில் இருந்து கடலுக்குள் சுமார் 50 கி.மீ தொலைவில் வெள்ளைத் தீவு உள்ளது. இந்த தீவில் சில எரிமலைகள் உள்ளன. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப்பயணிகள் எரிமலையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த 9-ம் தேதி வெள்ளைத் தீவில் உள்ள எரிமலைகளில் ஒன்று திடீரென வெடித்ததில் அங்கு சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் பலர் காயமடைந்தனர். மேலும் 5 பேர் பலியானார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பின்னர் மீட்புப் பணியினர் நடத்திய தேடுதல் பணியில் தீக்காயங்களுடன் 40-க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து எரிமலை சீற்றம் சற்று அடங்கியதால் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்