Image Courtesy : AFP  
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.52 கோடி ஆக உயர்வு

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 400 பேர் குணமடைந்துள்ளனர்.

வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 55 லட்சத்து 31 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 400 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 96 ஆயிரத்து 913 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 86,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...