அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புகாரி உள்ளார். அதிபரின் மூத்த உதவியாளராகவும், பணியாளர்களின் தலைவராகவும் இருந்து வந்தவர் மல்லம் அப்பா கியாரி. மிகவும் செல்வாக்கான நபராக திகழ்ந்து வந்தார்.
இவரை கொரோனா வைரஸ் தாக்கியது. இதையடுத்து, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே அவருக்கு நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வந்தன.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மல்லம் அப்பா கியாரி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 70 வயது கடந்த இவரது மறைவுக்கு அதிபர் முகமது புகாரி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.