உலக செய்திகள்

இலங்கையில் வரும் 31ந்தேதி வரை இரவு நேர பயண தடை: இன்றிரவு முதல் அமல்

இலங்கையில் வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள இரவு நேர பயண தடை இன்றிரவு முதல் அமலுக்கு வருகிறது.

தினத்தந்தி

கொழும்பு,

உலக நாடுகளை பாதித்துள்ள கொரோனாவுக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையும் ஒன்று. அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் தொற்றியல் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று 2,275 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.

இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,746 ஆக உள்ளது. ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 962 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்தது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா பாதிப்புகள் உயர்வை முன்னிட்டு இன்று முதல் தனிமைப்படுத்துதலுக்கான விதிகளும் கடுமையாக்கப்பட்டன. இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் மீறும் நபர்கள் மற்றும் அவர்களை சுமந்து செல்லும் வாகனங்கள் ஆகியவை சிறை பிடிக்கப்படும் என அறிவித்து உள்ளார்.

இந்த விதிமீறலில் ஈடுபட்ட 262 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனால், கடந்த அக்டோபர் 30ந்தேதி முதல் இதுவரை விதிமீறலில் ஈடுபட்ட 9,850 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று, இலங்கையில் வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள இரவு நேர பயண தடை இன்றிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, நெருக்கடியான சூழலை தவிர்த்து, இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருக்கும்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை