உலக செய்திகள்

பாகிஸ்தானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது- இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

லாகூர்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், முல்தான் நகரில் இன்று குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்தபோது அந்த குடியிருப்பில் 11 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி மர்யம் நவாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி