உலக செய்திகள்

தாய்லாந்து பிரதமருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சாவை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாங்காக் நகரில் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

பாங்காக்,

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ராணுவ அமைச்சக உயர் மட்டக்குழு ஒன்று தாய்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளது. இரு நாடுகள் இடையேயும் உறவை மேம்படுத்துவதற்காக ராணுவ மந்திரி இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

நேற்று அவர், தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்-ஓ-சாவை பாங்காக் நகரில் சந்தித்து பேசினார். இதேபோல் அந்நாட்டின் துணை பிரதமர் பிராவித் வோங்சுவானையும் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகள் இடையேயும் ராணுவ ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு