உலக செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை - உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஈடுபட்டு வந்தன. இதில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்க அனுமதி அளித்ததையடுத்து தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் பெரும்பாலான மருந்துகள் கொரோனாவை தடுக்க பெருமளவில் உதவியாக உள்ளன என்றாலும், ஒருசில மருந்துகள் பக்கவிளைவு ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பு மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது இலவசம் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது. எனவே வெளிநாடுகளுக்கு கொரோனா மருந்தை விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளை உலகம்முழுவதும் அனுப்பலாம். இந்த மருந்துகளின் ஏற்றுமதிக்கு தடை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு மருந்துகளை உலகம் முழுவதும் எந்த ஒரு நாட்டுக்கும் அனுப்பலாம். வினியோகம் செய்யலாம். ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்