வாஷிங்டன்
இந்த உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகுவதாக சமீபத்தில் அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இந்த உடன்படிக்கை பாதகம் செய்வதாக தேர்தல் பிரச்சாரத்தின் போதே டிரம்ப் கூறிவந்தார்.
என்றாலும் சில தினங்களாக நாளேடுகளில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டிலிருந்து மாறி மென்மையான போக்கை மேற்கொள்ள விரும்புவதாக செய்திகள் வெளிவந்தன. வரவுள்ள மாண்டிரீல் பேச்சுவார்த்தைகளில் இது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கருதப்பட்டது. எனினும் இதை வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் வால்டர்ஸ் மறுத்துள்ளார்.
அதிபர் ஏற்கனவே தெளிவுபடுத்தியது போல அமெரிக்காவிற்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றாலே ஒழிய மீண்டும் இணைவது என்ற பேச்சே இல்லை என்றார் அவர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் டில்லர்சன் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு நியாயம் செய்யும், சமநிலையை கொடுக்கும், குறிப்பாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவோடு ஒப்பிடும்போது அமெரிக்காவின் பொருளாதார நலன்களை அங்கீகரிக்கும் அம்சங்களை ஏற்கும் வாய்ப்பு வந்தால் எங்கள் கூட்டாளி நாடுகளுடன் இது குறித்து பேசும் வாய்ப்பிருக்கும் என்றார்.
பாரிஸ் ஒப்பந்தம் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கே சாதகமாக இருப்பதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தகுந்தது.