உலக செய்திகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது; அஸ்ட்ராஜெனேகா நிறுவனம்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து உள்ளன.

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது ஆகும்.

இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டதாக கூறி இந்த தடுப்பூசிக்கு டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து உள்ளன.

இதனால் பிற நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசியை தயாரித்து வரும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம், இந்த தடுப்பூசி பாதுகாப்பு மிகுந்தது என்பது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போடப்பட்ட 1.7 கோடிக்கும் மேற்பட்டோரை கவனமாக பரிசோதித்ததில், நுரையீரல் அடைப்பு, ஆழமான நரம்பு பாதிப்பு உள்ளிட்ட எந்தவித பாதிப்பும் அதிக அளவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை.

இந்த நாடுகளில் கடந்த 8-ந் தேதி வரை வெறும் 15 நரம்பு பாதிப்பு பிரச்சினையும், 22 நுரையீரல் அடைப்பு பிரச்சினையும் கண்டறியப்பட்டு உள்ளது. இது எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவு என கூறியுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் இந்த தடுப்பூசி கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு