உலக செய்திகள்

ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்பது தொடர்பாக எந்தஒரு ஆதாரமும் இல்லை - ஒபாமா

ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்பது தொடர்பாக எந்தஒரு ஆதாரமும் இல்லை என ஒபாமா கூறிஉள்ளார்.

பாகிஸ்தானில்

அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன். இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க ராணுவம் ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பியர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்து கொன்றது.

அமெரிக்கா தேடியபோதே ஒசாமா பின்லேடன் இருந்த இடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்பதே பல்வேறு தரப்பு தகவலாக இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என்பது தொடர்பாக எந்தஒரு ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசிஉள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிடம் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத வெளிப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. ஒபாமா பேசுகையில், பாகிஸ்தானில் சிலநேரங்களில் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகள் இடையே உள்ள தொடர்பு ஏமாற்றமளிக்கிறது என்றார். ஒசாமா பின்லேடன் இருப்பிடம் பாகிஸ்தான் அரசுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு ஒபாமா பதில் அளிக்கையில், ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்தது தொடர்பாக பாகிஸ்தானுக்கு தெரியும் என்பது தொடர்பாக எங்களுக்கு எந்தஒரு ஆதாரமும் கிடையாது, வெளிப்படையாகவே அவ்வாறு பார்க்கப்பட்டது,என கூறினார்.

ஆனால் ஒசாமா பின்லேடன் இருந்த இடம் பாகிஸ்தானுக்கு தெரியும் என அந்நாட்டின் முன்னாள் உளவுப்பிரிவு தலைவர் அசாத் துர்ரானி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்