உலக செய்திகள்

ரஷியாவின் போர் நடவடிக்கையில் சேரும் திட்டம் இல்லை - பெலாரஸ் அதிபர் உறுதி

ரஷியாவின் போர் நடவடிக்கையில் சேரும் திட்டம் ஏதும் இல்லை என்று பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷெங்கோ உறுதி அளித்துள்ளார்.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த போரில் மூன்றாவது நாடாக, அண்டை நாடான பெலாரசும் களத்தில் குதித்ததாக தகவல் வெளியானது. பெலாரஸ் படைகள் உக்ரைன் நாட்டின் வட பகுதி வழியாக நேற்று நுழைந்ததாக உக்ரைன் வடக்கு பிராந்திய பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் விட்டலி கிரிலோவ் தெரிவித்தார்.

ரஷிய படைகளுக்கு ஆதரவாக உக்ரைனின் செர்னிஹிவ் நகருக்குள் பெலாரஸ் படைகள் நுழைந்து இருப்பதை உக்ரைன் நாடாளுமன்றமும் உறுதி செய்தது. ஆனால் அதை பெலாரஸ் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. உக்ரைனில் ரஷியாவின் போர் நடவடிக்கையில் சேரும் திட்டம் ஏதும் இல்லை என்று பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷெங்கோ உறுதி அளித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்