உலக செய்திகள்

தலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப் 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்

தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்ட நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப் 6 வருடங்களுக்கு பின் சொந்த நாட்டிற்கு இன்று திரும்பியுள்ளார். #MalalaYousafzai

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2012ம் ஆண்டில் பள்ளி கூடத்தில் இருந்து பேருந்து ஒன்றில் மலாலா யூசுப் என்ற மாணவி வீடு திரும்பி கொண்டிருந்து உள்ளார். அந்த பேருந்து நடுவழியில் முகமூடி அணிந்த துப்பாக்கி ஏந்திய தலீபான் தீவிரவாதிகள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

அவர்கள் மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். பெண்களுக்கு கல்வி அவசியம் என்று வலியுறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதில் உயிர் தப்பிய மலாலா பின்னர் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

பெண்களுக்கு கல்வியை வலியுறுத்தியதற்காக கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் அவர் கடந்த வாரம் 23ந்தேதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நாளில் வீட்டின் மேற்பகுதியில் கிரிக்கெட் விளையாடியது மற்றும் பள்ளி கூடத்தில் தேசிய கீதம் பாடியது ஆகிய நினைவுகளால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்