உலக செய்திகள்

ஏவுகணை சோதனை வெற்றி ஸ்டாம்ப் வெளியிட்டு கொண்டாடிய வடகொரியா

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிப் பெற்றதால், அது தொடர்பான ஸ்டாம்பை வடகொரியா வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

வடகொரியா கடந்த 29-ஆம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. இந்த ஏவுகணை 4,475 கி.மீட்டர் உயரம் சென்ற பிறகு 950 கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலக்கை திட்டமிட்டபடி தாக்கி அழித்தது.

குறித்த ஏவுகணைக்கு Hwasong-15 என்று பெயரிடப்பட்டிருந்தது. இது குறித்து வடகொரியா ஜனாதிபதி அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் அதிநவீன வசாங்-15 ஏவுகணை சேதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து வடகெரியா ஒரு அணுஆயுத சக்தி படைத்த நாடாகி உள்ளது.

அமெரிக்காவின் மிரட்டல், படையெடுப்பில் இருந்து வடகெரியாவைப் பாதுகாக்கவே இந்த சேதனை நடத்தி பார்க்கப்பட்டது. இதன் மூலம் பெறுப்புள்ள அணுசக்தி நாடாக வடகெரியா நடந்து கெள்ளும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த வெற்றியை மேலும் சிறப்பாக்கும் வகையில் Hwasong-15 ஏவுகணை தொடர்பான ஸ்டாம்ப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் நாம் வரலாறு படைத்துவிட்டோம், அமெரிக்காவின் எந்த பகுதியையும் தாக்கும் தன்மை இதற்கு உள்ளது.கடந்த 29-ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 02.48 மணிக்கு நடந்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஸ்டாம்புகளில் Hwasong-15 ஏவுகணை, வடகொரியாவின் கொடி மற்றொரு ஸ்டாம்பில் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருப்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணை குறித்து ஸ்டாம்ப் வெளியிடுவது இது ஒன்றும் முதல் முறையல்ல எனவும் ஆகஸ்ட மாதம் நடந்த ஒரு ஏவுகணை சோதனை தொடர்பான புகைப்படத்தை வடகொரியா வெளியிட்டிருந்தது.

வடகொரிய அதிபர் கின், புத்தாண்டையொட்டி அந்நாட்டு மக்களிடம் நேற்று ஊடகம் வாயிலாக உரையாடினார். புத்தாண்டு வாழ்த்து கூறிவிட்டு அவர் பேசியதாவது.. வட கொரியா அணுசக்தி நாடாக உருவெடுத்து வருகிறது. அணுஆயுதங்களையும், ஏவுகணைகளையும் பெரியளவில் தயாரிப்பதே நம் இலக்கு என்று பேசி உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

#NorthKorea #nuclear #Hwasong15 #KimJongun #latesttamilnews

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை