தனியார் துறைகளின் தலையீடு அதிகமாக இருப்பதால், பழமையான மரங்களையும், அபூர்வ வகை மரங்களையும் கூட விட்டுவைக்காமல் அழித்து வருகிறார்கள். அந்தவகையில் பசிபிக் லூம்பர் என்ற நிறுவனத்தினர் 1500 வருடங்கள் பழமையான கலிபோர்னியா ரொட்வுட் மரத்தை வெட்டி, விற்க திட்டமிட்டிருக்கிறார்கள். இதை தெரிந்து கொண்ட ஜூலியா என்ற இயற்கை ஆர்வலர், இரவோடு இரவாக அந்த மரத்தில் ஏறி அமர்ந்துவிட்டார்.
ஜூலியாவின் விநோத போராட்டத்தால் அதிர்ந்துபோன பசிபிக் லூம்பர் நிறுவனம், அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கும் வரை காத்திருக்கபோவதாக அறிவித்தனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜூலியா, அன்றிலிருந்து இன்று வரை மரத்திலேயே தங்கியிருக்கிறாராம். அவர் தரையில் இருந்து மரத்தில் ஏறி கிட்டத்தட்ட 750 நாட்களுக்கும் மேலாகிறது. உணவு, உடை... போன்ற அத்தியாவசிய தேவைகளை ஜூலியாவின் நண்பர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.