உலக செய்திகள்

இங்கிலாந்தில் எண்ணெய் கப்பல் கடத்தல்; சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது

இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது.

லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த எண்ணெய் கப்பலை நைஜீரிய நாட்டினர் கடத்த முயன்றுள்ளனர் என கூறப்படுகிறது.

இதன்பின்னர் ராணுவ வீரர்கள் கப்பலில் இறங்கி அதில் இருந்தவர்களை பாதுகாப்பதற்காகவும், கப்பலை மீட்பதற்கான பணிகளில் ஈடுபடவும் தொடங்கினர். கப்பலை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள் பின்னர் 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கப்பலின் ஊழியர்கள் பாதுகாப்புடனும் மற்றும் நலமுடனும் உள்ளனர் என அறிக்கைகள் உறுதி செய்து உள்ளன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு