உலக செய்திகள்

ஜெர்மனியில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

ஜெர்மனியில் முதன்முறையாக ஒமிக்ரான் கொரோனா பாதித்த 2 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.

பெர்லின்,

உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்திய கொரோனா வைரசானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்து உள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது. இதேபோன்று, ஜெர்மனியிலும் முதன்முறையாக பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்