உலக செய்திகள்

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

நேபாளத்தில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

காத்மண்டு,

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு பரவியுள்ளது. இதனால், விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை பல்வேறு அரசுகளும் விதித்துள்ளன.

இதனை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போத்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், லெசோதோ, எஸ்வாடினி மற்றும் மலாவி ஆகிய 9 நாடுகளை சேர்ந்த பயணிகள் நேபாளத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக உயர் அதிகாரிகள் மட்டுமே தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் நேபாள அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், நேபாள நாட்டில் இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நேபாள அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்து உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்