உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவர்களையும் பாதிக்கும் ஒமைக்ரான் வைரஸ்: உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்டா மாறுபாட்டை விட ஓமிக்ரான் வேகமாக பரவுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இப்போது உள்ளன.

தினத்தந்தி

ஜெனீவா,

கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான், டெல்டா வகையை விட வேகமாக பரவி வருகிறது. இது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நோயிலிருந்து மீண்டவர்களையும் ஒமைக்ரான் தாக்கி வருகின்றது. இது தற்போது டெல்டாவை விட வேகமாக பரவி வருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும், நோயிலிருந்து மீண்டவர்களும், மீண்டும் ஒமைக்ரானால் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அவர் ஜெனீவாவை தளமாகக் கொண்ட புதிய தலைமையக கட்டிடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை