உலக செய்திகள்

அமெரிக்காவில் ஓமைக்ரான் மிகவும் வேகமாக பரவத் தொடங்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை..!

தடுப்பூசி போட்டுக்கொள்வதே உண்மையான பாதுகாப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், "தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. இது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவத்தொடங்கும்.

தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம். எனவே மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி மட்டுமே நமக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கக்கூடிய ஒன்றாகும். தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்" என்று ஜோ பைடன் கூறினார்.

புள்ளிவிவரங்களின்படி, உலகில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 1,150 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்