உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு - ஆய்வில் தகவல்

உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

இந்த நிலையில் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறியிருப்பதாவது:-

"இங்கிலாந்தில் டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கு பிறகு நீண்ட கால கொரோனா பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது. இது நோயாளியின் வயது மற்றும் கடைசி தடுப்பூசி செலுத்திய நேரத்தை பொறுத்து மாறுபடும்.

ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது. ஆனாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்."

இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து