உலக செய்திகள்

ஒமைக்ரான் பாதிப்பு; அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதித்த நபர்களில் ஒருவர் முதன்முறையாக உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனாவின் உருமாற்றம் பெற்ற புதிய வகை ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. போட்ஸ்வானா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 89 நாடுகளுக்கும் கூடுதலாக பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

ஒரு சில நாடுகளில் ஒமைக்ரானால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி டெக்சாஸ் மாகாண சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், 50 வயது கொண்ட முன்பே கொரோனா பாதித்த நபர் ஒருவர் ஒமைக்ரான் பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார். அவர் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளவில்லை. உடல்நல பாதித்த நிலையிலும் காணப்பட்டார் என தெரிவித்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்