உலக செய்திகள்

ஐரோப்பிய நாட்டை சேர்ந்த 4 சுற்றுலாவாசிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு

இந்தியாவிற்கு சுற்றுலா வந்த 4 ஐரோப்பிய நாட்டினருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மதுரா,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் ஒமிக்ரான், அதிக ஆபத்துள்ளது என அறியப்படுகிறது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் நாடுகளுக்கு பரவி விட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதே போன்று, ஜெர்மனியிலும், இங்கிலாந்து மற்றும் இத்தாலியிலும் ஒமிக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.

இந்நிலையில் வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரான் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டு பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 4 பேரும் சுற்றி வந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சோதனை நடத்தப்படும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் லித்துவேனியா நாட்டை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணுக்கு முதலில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுதவிர, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாவாசிகளுக்கும், 41 வயதுடைய ஆஸ்திரியா பெண்ணுக்கும் என 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்