உலக செய்திகள்

நடிகை பிரியங்கா சோப்ரா மீது பாக். பெண் நேரடி குற்றச்சாட்டு

அணுஆயுத போரை தூண்டுவதாக நடிகை பிரியங்கா சோப்ரா மீது பாகிஸ்தான் பெண் நேரடி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

தினத்தந்தி

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஐ.நா. நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பார்வையாளர் பகுதியில் இருந்த ஒரு பாகிஸ்தான் பெண்மணி, அவரை பார்த்து நேரடியாக குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததை வாழ்த்தி பிரியங்கா போட்ட டுவிட்டர் பதிவை அப்பெண் சுட்டிக்காட்டினார். நல்லெண்ண தூதராக இருக்கும் நீங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக அணுஆயுத போரை தூண்டி விடலாமா? என்று அவர் கேட்டார்.

அதை பொறுமையாக கேட்ட பிரியங்கா, நான் போரை தூண்டக்கூடிய ஆள் அல்ல. ஆனால் எனக்கு தேசபக்தி இருக்கிறது. பாகிஸ்தானில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். என்னை நேசிக்கும் அவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை