உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

பாரிஸ்,

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சுக்கு சென்று கொண்டிருந்த இமானுவேல் மேக்ரான், அவ்வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரெனெ ஒரு நபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்தார்.

உடனடியாக இதைக் கவனித்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபரை பிடித்து இழுத்துச்சென்றனர். பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து