உலக செய்திகள்

இளவரசர் பிரின்ஸ் மீதான அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கு: நியூயார்க் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகனான இளவரசர் பிரின்ஸ் மீது அமெரிக்க பெண் தொடர்ந்த கற்பழிப்பு வழக்கை நியூயார்க் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது.

தினத்தந்தி

நியூயார்க்,

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. தற்போது 61 வயதான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் மீது அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது இவர் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்ததாகவும், அப்போது அவருக்கு ஜெப்ரி எப்ஸ்டின் என்பவர் தனது காதலியான விர்ஜீனியா ஜிப்ரே என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் விர்ஜீனியாவுக்கு, இளவரசர் பிரின்ஸ் ஆண்ட்ரூ செக்ஸ் தொல்லை கொடுத்து கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த சமயத்தில் விர்ஜீனியாவுக்கு 17 வயது தான் ஆகியிருந்ததாக தெரிகிறது.

மைனர் பெண்ணான விர்ஜீனியாவை மிரட்டி பிரின்ஸ் ஆண்ட்ரூ பாலியல் உறவு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது விர்ஜினீயாவுக்கு 37 வயது ஆகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக அவர் நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணை நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் நடந்தது.

10 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த விசாரணையில், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதி லீவிஸ் ஏ.கப்லன் அறிவித்தார். மேலும் இவ்வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு(2022) செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என்றும், விசாரணை தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கிடையே விர்ஜீனியாவின் காதலர் ஜெப்ரி எப்ஸ்டீன் தற்கொலை செய்து கொண்டார். அவர் இளவரசர் மீதான செக்ஸ் புகாரில் தன்னிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீனின் முன்னாள் காதலியும் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகன் மீது செக்ஸ் புகார் எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்