உலக செய்திகள்

ஸ்ரீதேவி மரணம் தாவூத் இப்ராஹிமுடன் முடிச்சு போடும் சுப்பிரமணிய சுவாமி

ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக பிரபல கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிமுடன் முடிச்சு போடுகிறார் சுப்பிரமணிய சுவாமி #Sridevi #RIPsridevi #SubramanianSwamy

துபாய்

நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்கு துபாய் சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக இறந்ததாக முதலில் கூறப்பட்டது. தற்போது அவர் தற்செயலாக நீரில் மூழ்கி இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

இந்த மரணம் தொடர்பாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் துபாய் புருஷூஸ் போலீஸ் நிலையம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம்

பல்வேறு கேள்விகளை கேட்ட போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்று கொண்டனர்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் உடல் இந்தியாற்கு கொண்டு வரப்படுவதில் மேலும் தாமதம் ஏற்படலாம் என தெரிகிறது. துபாயில் உள்ள காவல்துறையினர், இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதில் மற்றொரு "அனுமதியும் கூட அளிக்கப்பட வேண்டி உள்ளது என கூறி உள்ளனர். ஸ்ரீதேவியின் உடல் இன்று எம்பால்மிங் செய்யப்படும்.

இறந்த 24 மணி நேரத்துக்குப்பின் பிரேத பரிசோதனை நடந்தது. அதன் பிறகு உடல் பாகங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கை தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி இயற்கையாகவே நீரில் மூழ்கி இறந்தாரா? எப்படி குளியல் தொட்டியில் மூழ்கினார்? அதில் மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்திய தூதரக அதிகாரிகள் இன்று பிற்பகலில் ஸ்ரீதேவியை அனுப்பி வைக்கப்பட அனைத்து அங்கீகாரங்களையும் பெற முயற்சித்து வருகின்றனர்.

அவருடைய மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பட்டு வருகின்றன.

போனிகபூர் குளியல் அறையை முட்டித்தள்ளிக் கொண்டு சென்றபோது மாலை 6.25 மணி என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்த சம்பவம் குறித்து துபாயைச் சேர்ந்த நண்பரின் அறிவுரைக்கு பிறகு இரவு 9 மணிக்குத்தான் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். ஏன் இந்த தாமதம்?... போனிகபூர் இது போன்ற சூழ்நிலையில் நட்சத்திர ஓட்டலின் அவசர மருத்துவ உதவியை ஏன் நாடவில்லை?... ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்தது என்பதை யார், எதற்காக கூறினார்கள்? என கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இந்த நிலையில், இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறும் போது அதை அரசு தரப்பு அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும். ஊடகங்களில் உள்ள உண்மைகள் நிலையானதாகத் தெரியவில்லை. அவர் கடினமான மது அருந்தமாட்டார். அது எப்பாடி ஆய்வில்தெரிந்தது. சிசிடிவி எங்கே அதில் என்ன நடந்தது. டாகடர்கள் திடீரென ஊடகங்களுக்கு முன் தோன்றி, இதய செயலிழந்தால் இறந்துவிட்டதாகக் கூறி உள்ளனர்.

மேலும் நடிகைக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கும் உள்ள தொடர்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.